தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் |

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு ரஜினி படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் நடிக்க, பணியாற்ற பல்வேறு கலைஞர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் மகள்களும் படத்தில் பணியாற்ற விரும்புகிறார்களாம்.
ரஜினிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள். இருவருமே இயக்குனர்கள். சினிமா துறையில் அனுபவம் உள்ளவர்கள். இவர்கள் அப்பா படத்தில் ஏதாவது ஒரு வகையில் தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். அதை போல் கமலுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருவருமே நடிப்பு துறையில் இருக்கிறார்கள். ஆகவே இவர்களும் அந்த முக்கியமான படத்தில் தாங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம்.
அதே போல் சுந்தர்.சிக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள். ஒரு மகள் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இன்னொருவர் படத்தயாரிப்பில் இருக்கிறார். இவர்களும் அப்பா இயக்கும் படத்தில் தங்கள் பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறார்களாம். இந்த 6 மகள்களில் எத்தனை பேருக்கு அந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்பது விரைவில் தெரிய வரும்.




